Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th September 2024 12:04:53 Hours

37 வது உலக செபக் டக்ரோ போட்டியில் இராணுவ வீரர்களுக்கு ஐந்து வெண்கலப் பதக்கங்கள்

தாய்லாந்தில் நடைபெற்ற 37 வது உலக செபக் டக்ரோ போட்டியில் இலங்கை தேசிய செபக் டக்ரோ குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவத்தின் நான்கு வீரர்களும் நான்கு வீராங்கனைகளும் எட்டு பிரிவுகளில் பங்குபற்றி ஐந்து ஐந்து வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இப்போட்டியானது ISTAF என அழைக்கப்படும் சர்வதேச செபக் டக்ரோ அமைப்பினால் நடாத்தப்பட்ட செபக் டக்ரோ சாம்பியன்ஷிப் – 2024 செப்டெம்பர் 1 – 8 வரை தாய் மன்னர் கிண்ணம் (தாய் கிங்ஸ் கப்) என்ற பெயரில் நடாத்தப்படும் அவர்களின் நாட்காட்டியின் சிறப்புமிக்க போட்டியாகும்.

இலங்கை இராணுவ செபக்டக்ரோ குழு இராணுவ விளையாட்டு வீரர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் நிர்வாக உதவியை வழங்கினர் என்பது குறிப்பிடதக்கதாகும்.