Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th July 2021 18:06:36 Hours

30 டொன் சேதன பசளை உற்பத்திக்கு கிளிநொச்சி படைகள் தயார் நிலையில்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் அரசாங்கத்தின் சேதன பசளை உற்பத்தி தொடர்பான வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு விடுக்கப்பட்ட பணிப்புக்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் மேற்பார்வையில் சேதன பசளை உற்பத்தி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 663 வது பிரிகேட் சிப்பாய்களால் விவசாயத்திற்கு அவசியமான சேதன பசளை உற்பத்திச் செய்யும் நிலையங்கள் ஜயபுரம், பூநகரி ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டன.

மேற்படி சேதன பசளை உற்பத்திக்கான மத்திய நிலையங்களை கட்டமைக்கும் பணிகள் 2021 ஜூலை 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இதன் போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மாதாந்தம் 30 டொன் சேதன பசளை உற்பத்தியை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார். அதனையடுத்து சேதன பசளை உற்பத்திச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்த தளபதி படையினருக்கு அவசியமான அறிவுரைகளையும் வழங்கினார். மேற்படி மத்திய நிலையம் 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் திசாநாயக்க மற்றும் 663 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுபாசன் லியனகம ஆகியோருடைய மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அதற்காக பெருற் தொகையான சிப்பாய்களின் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.

மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் சேதன பசளை பயன்பாடு தொடர்பில் பொது மக்களை தெளிவூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு, மேற்படி உற்பத்தியின் நிறைவில் கிளிநொச்சியின் முழுமையான சேதன பசளை உற்பத்தியை பூர்த்தி செய்ய இராணுவம் எதிர்ப்பார்த்துள்ளது. மேலும் உள்நாட்டு விவசாயிகளுக்கு சேதன பசளை உற்பத்தி தொடர்பிலான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் திசாநாயக்க மற்றும் கட்டளை அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன் சகலரும் சுகாதார ஒழுங்கு விதிகளை முறையாக பின்பற்றினர்.