Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th December 2024 22:36:51 Hours

3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி படையினரால் பாடசாலை உபகரண நன்கொடை

3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி படையினர் இணைந்து 06 டிசம்பர் 2024 அன்று சந்துன்புரவில் உள்ள லத்பதுர ஆரம்பப் பாடசாலையில் பாடசாலை உபகரண நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் டப்ளியூஎஸ்வீ பெர்னாண்டோ யூஎஸ்பீ என்டிசி ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது, தரம் 2, 3, 4, 5, மற்றும் 6 ஆம் வகுப்புகளில் பயிலும் 128 மாணவர்களுக்கு பாடசாலை பைகள், புத்தகங்கள் மற்றும் அத்தியாவசியப் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. நன்கொடைக்கான நிதியுதவியை திரு.ரொஷான் பிரியதர்ஷன மற்றும் திருமதி.தினுஷி லியனபத்திரன ஆகியோர் வழங்கினர். பாடசாலை மாணவ, மாணவிகள் தங்களது நடன நிகழ்ச்சிகளால் விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சிவில் விவகார அதிகாரி, கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், கல்வி அலுவலகப் பணியாளர்கள், அதிபர், பாடசாலை ஆசிரியர்கள், நிதிப் பங்களிப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.