18th May 2023 22:33:41 Hours
மாத்தறை மாவட்ட முலட்டியான பிரதேச செயலகத்தின் பெரகம (கிழக்கு) மற்றும் பெரகம (மேற்கு) கிராம அலுவலர் பிரிவுகளில் வசிப்பவர்களின் வேண்டுகோளின் பேரில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 613 வது காலாட் பிரிகேட்டின் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினரால் வௌ்ளத்தால் மாசடைந்த பொதுமக்களின் மூன்று குடிநீர் கிணறுகள் மே 15 - 16 காலப்பகுதியில் தூய்மையாக்கப்பட்டன.
சமீபத்தில் வெள்ளம் காரணமாக அந்த மூன்று கிணறுகளும் மிகவும் மாசுபட்டன இதனால் அப்பகுதிக்கு தூர இடங்களில் இருந்து தண்ணீரை எடுத்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 613 வது காலாட் பிரிகேட் தளபதி, மற்றும் 613 வது பிரிகேட்டின் மேற்பார்வையில் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினரால் அவ் இடங்களுக்குச் சென்று, அப்பகுதியில் வசிப்பவர்களின் ஆதரவுடன் மூன்று கிணறுகளையும் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.