31st January 2024 20:26:33 Hours
3வது இலங்கை கவசவாகன படையணியின்வருடாந்த கருத்தரங்கு 2024 ஜனவரி 18 ம் திகதியன்று "சமகால சவால்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் கவசத்தின் திறன் மேம்பாடு" ஆகியவற்றை மையமாகக் கொண்டுபடையணியின் முதல் கருத்தரங்கு இடம்பெற்றது. மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர். மேஜர் ஜெனரல் பீஆர்பத்திரவிதான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் சிறப்பு உரையாற்றினார்.
கேணல் டிஎம்ஜீஎச் டி சில்வா பீஎஸ்சீ மற்றும் லெப்டினன் கேணல் பீஜீஐஎல் பெரேரா ஆர்எஸ்பீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், திறன் மற்றும் தயார்நிலை, சமகால சவால்கள், சம்பவ ஆய்வுகள் மற்றும் புதுமை மற்றும் வளர்ச்சி ஆகிய தலைப்புகளை உள்ளடக்கியருந்தன. கவச வாகன படையணியின் நிலைய தளபதி மற்றும் கவச வாகன பிரிகேட் தளபதி உள்ளிட்ட பேரவை உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதிகாரிகள் உணவகத்தில் முறையான மதிய உணவுடன் நிகழ்வு நிறைவடைந்தது.