Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th February 2025 09:50:26 Hours

3 வது மற்றும் 4 வது இயந்திரவியல் காலாட் படையணி படையணியினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் திறந்து வைப்பு

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும், இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 3 வது இயந்திரவியல் காலாட் படையணி மற்றும் 4 வது இயந்திரவியல் காலாட் படையணி கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் இரண்டு அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு 2025 பெப்ரவரி 3 அன்று கையளிக்கப்பட்டன.

இந்த முயற்சிக்கான நிதி உதவியை இயந்திரவியல் காலாட் படையணி வழங்கியதுடன் மேலும் பணியாளர்களின் உதவியும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.