28th April 2025 11:24:08 Hours
2025 ஏப்ரல் 26 அன்று மாணிக்க கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது பலத்த நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்ட தாய் மற்றும் அவரது மகனை 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் மீட்டனர். வெஹெரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.