28th November 2024 11:34:19 Hours
மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, முதலாம் படை தளபதி மேஜர் ஜெனரல் எம்டீஐ மஹாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 53 வது காலாட் படைப்பிரிவு தளபதி மற்றும் ஏர்மொபைல் பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தல்களுடன், 3 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் 27 நவம்பர் 2024 அன்று பெரியகுளம் குளக்கட்டை வெற்றிகரமாகப் பாதுகாத்தனர்.
3 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 3 அதிகாரிகள் மற்றும் 20 சிப்பாய்கள் இணைந்து குளக்கட்டில் நீர் மட்டம் உயர்வதால் உடைந்து போகும் அபாயத்தில் உள்ள பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைச் சுற்றி மணல் மூட்டைகளை வைத்தனர். அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் விரைவாக செயற்பட்ட படையினரின் செயற்பாட்டினை பாராட்டியதுடன் நன்றிகளையும் தெரிவித்தனர்.
8 வது கஜபா படையணி படையினர் 26 நவம்பர் 2024 அன்று மாத்தளை ஓவிலிக்கந்தவில் பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். படையினர் விரைவாக செயற்பட்டு, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்து மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளித்தனர்.
மேலும், கிரிமெட்டியவ-மகுலேமட வீதியில் விழுந்த பாரிய மரத்தை 8 வது கஜபா படையணி படையினர் அகற்றினர். அவர்களின் உடனடி மற்றும் திறமையான செயற்பாடு போக்குவரத்து சீரமைத்துடன் பொது சிரமத்தைத் தணித்தது மற்றும் சமூகத்திற்கு நிவாரணம் அளித்தது.