12th March 2024 17:09:44 Hours
112 வது காலாட் பிரிகேட்டின் 3 (தொ) இலங்கை சிங்க படையணி படையினரால் 09 மார்ச் 2024 அன்று மந்தாரம்நுவரவில் வசிக்கும் ஒரு ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 112 வது காலாட் பிரிகேட் தளபதி டபிள்யூ.ஏ.ஜே. ஹேமச்சந்திர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிர்மாண வேலைத்திட்டத்தின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில் அடிக்கல் நாட்டினார்.
3 (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்ஜே சமரநாயக்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் 3 (தொ) இலங்கை சிங்க படையணியின் படையினரால் இந்த திட்டம் அனுசரனையாளரின் நிதி உதவியில் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.