Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2020 15:07:46 Hours

259 படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்ற பயிற்சி நிறைவு நிகழ்வு

விடுதல்தீவு பயிற்சி முகாமில் பயிற்சி இலக்கம் 12 இன் கீழ் இராணுவத்தில் புதிதாய் இணைந்து பயிற்சிகளை நிறைவு செய்த 259 படையினர்கள் வெளியேறும் நிகழ்வானது கடந்த டிசம்பர் மாதம் (28) ஆம் திகதி இடம்பெற்றது.

கஜபா மற்றும் கொமாண்டோ படையணியைச் சேர்ந்த படை வீரர்கள் இந்த பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறினர். இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான பிரிகேடியர் D.S.D வெலிக்கல அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

இந்த பயிற்சி வெளியேற்ற நிகழ்வில் உடற்பயிற்சி, டைகொண்டோ, பேன்ட் அணிவகுப்பு கண்காட்சிகள் இடம்பெற்றன. இந்த பயிற்சிகளில் சிறந்த குழுப் பயிற்சியாளராக ரயிபல்மென் D.M.S.I சந்திர்ரத்னவும், சிறந்த சூட்டாளராக H.M.A.A.S திலகரத்ன அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிறந்த திறமையான சுறுசுறுப்பான போர் வீரனாக A.J.K.R மதுசங்கவும், சிறந்த பெறுபேறுகளை பெற்ற பயிற்சி வீரனாக T.G.M.L பிரேமவங்ஷவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த பயிற்சியில் சிறந்த குழு அதிகாரியாக இராணுவ பொது சேவை படையணியைச் சேர்ந்த லெப்டினன்ட் B.K.R.M போஹபிடியவும், சிறந்த குழு சாஜனாக புஸ்ப குமாரவும், சிறந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக கனர் J.R.D.P ஜயபால அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பயிற்சியில் சிறப்பு தேர்ச்சி பெற்ற வீரர்களுக்கு பிரதம அதிதி அவர்களினால் வெற்றி கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வினூடாக இந்த பயிற்சி முகாம் வளாகத்தினுள் ‘துரு மிதுர நவ ரடக்’ எனும் கருத்திட்டத்தின் கீழ் மரநடுகைகள் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியின் தலைமையில் இடம்பெற்றன. இதன் போது இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். trace affiliate link | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf