19th August 2023 20:59:08 Hours
1992 ஆம் ஆண்டு அராலி முனையில் உயிர் தியாகம் செய்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மற்றும் ஏனையோரின் நினைவு நாளை முன்னிட்டு அங்கொட 'ஹிருகிரண' சமூக பராமரிப்பு அறக்கட்டளை 2003 ஆம் ஆண்டு தொடக்கம் 21 வது தடவையாக 13 ஓகஸ்ட் 2023 அன்று கொட்டிகாவத்தை சோமாதேவி பெண்கள் கல்லூரியில் இரத்த தான நிகழ்வினை ஏற்பாடு செய்தது.
மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 144 வது காலாட் பிரிகேடின் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 25 இராணுவ வீரர்கள் தானாக முன்வந்து இந்த வருடாந்த திட்டத்தில் இரத்த தானம் செய்தனர்.
இந் நிகழ்வின் போது இரத்ததானம் செய்தவர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினரால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.