Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25 ஏக்கர் கைவிடப்பட்ட வயல் நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்ள 2 வது (தொ) காலாட் படையினர் ஒத்துழைப்பு வழங்கினர்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படை பிரிவு தலைமையகத்தின் கீழுள்ள 144 வது பிரிகேட்பிரிவின் 2 வது (தொ) இலங்கை காலாட்படையின் படையினர் விவசாய சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் எவரியாஹேன, ஹோகந்தர பகுதியில் காணப்படும் வயல்களுக்கான நீர்ப்பாசன கால்வாயின் தடையை சனிக்கிழமை (5) முழுமையாக அகற்றினர்.

அப்பகுதி கிராம உத்தியோகத்தர் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் படையினரை அணுகி, சுமார் 1.5 கிலோமீற்றர் நீளமுள்ள கால்வாய் நீர்வழிப்பாதையினூடாக சுமார் 25 ஏக்கர் கொண்ட எவரியாஹேன வயல்களில் விவசாயம் செய்ய முடியும் என்பதனாலும் தற்பொழுது அக்கால்வாயானது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதனால் அதனை சுத்தப்படுத்த இராணுவத்தின் உதவியை கோரினர்.

நீர்வழிப்பாதையை சுத்தப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் 14 வது படைபிரிவின் தளபதியினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்களுக்கமைய 144 வது பிரிகேட் தளபதி கேணல் விந்தன கொடித்துவக்குவின் பங்களிப்புடன் இரண்டு நாட்களாக இடம்பெற்றன.2 வது (தொ) காலாட்படையணியின் படையினர் கமநல அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகள் முன்னிலையில் தமது கட்டளை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் சனிக்கிழமை (5) பணிகளை மேற்கொண்டனர்.

14 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன, 144 வது பிரிகேட் தளபதி கேணல் விந்தன கொடிதுவக்கு, கிராம அபிவிருத்திக் குழுவின் தலைவர், விவசாய சங்கத்தின் செயலாளர் ஆகியோர் இத்திட்டத்திற்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.