07th February 2025 16:03:12 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ், 242 வது காலாட் பிரிகேட் மற்றும் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், 2025 பெப்ரவரி 4ம் திகதியன்று திருக்கோவில் மெதடிஸ்ட் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு மற்றும் பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினர்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.