25th March 2023 21:26:07 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைப்பிரிவின் 242 வது காலாட் பிரிகேடின் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியை சேர்ந்த இராணுவ படையினர் வியாழக்கிழமை (மார்ச் 23) காலை திருக்கோவில் தம்பிலியுவில் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீயினை அணைப்பதற்கு உதவினர்.
திருக்கோவில் தீயணைப்புப் பிரிவினரின் தகவல் மற்றும் வேண்டுகோளுக்கு இணங்க 242 வது காலாட் பிரிகேடின் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 2 அதிகாரிகள் மற்றும் 25 சிப்பாய்கள் இரண்டு தண்ணீர் பவுசர்களுடன் திருக்கோவில் தீயணைப்புப் பிரிவினருடன் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்துடன் ஏனைய பகுதிகளுக்கு அதிக சேதம் ஏற்படுவதற்கு முன்னர் சில மணித்தியாலங்களில் வேகமாக பரவிய தீயை கட்டுக்குள் கொண்டுவரந்தனர்.
242 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுராதா சோலங்கராச்சி அவர்கள் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் டீடிஎஸ்கே தெனியாயவுடன் இணைந்து 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் கிழக்குப் பாதுகாப்புப் படைக தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் பணியை நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.