Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th December 2021 18:20:04 Hours

242 வது பிரிகேட் படையினரால் பொத்துவில் வைத்தியசாலைக்கு இரத்த தானம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் 242 வது பிரிகேடின் 5 அதிகாரிகள் மற்றும் 74 சிப்பாய்கள் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை (12) 242 வது பிரிகேட் தலைமையகத்தில் இரத்த தான செய்தனர்.

மேற்படி ஏற்பாடுகள் 242 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திக்க பீரிஸ் அவர்களின் ஏற்பாட்டில் பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் பெறப்பட்ட இரத்தம் அம்பாறை இரத்த வங்கியில் சேமித்து வைக்கப்பட உள்ளதாக வைத்திய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

24 வது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், 242 பிரிகேடின் பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.