27th July 2023 20:43:47 Hours
24 வது காலாட் படைப்பிரிவின் 242 வது காலாட் பிரிகேடுடன் இணைந்து அருகம்பே அபிவிருத்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்த சர்வதேச அரை மரதன் போட்டி -2023 ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) அருகம்பே இலங்கையில் சுற்றுலா (விசிட் ஸ்ரீலங்கா) என்ற தொனிப்பொருளின் கீழ் ஆரம்பமானது.
21.1 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ என மூன்று பிரிவுகளின் கீழ் போட்டி நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் 220 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஓட்ட வீரர்கள் கலந்துகொண்டதுடன், 242 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கேபீஎல் அமுனுபுர ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, 14 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, 242 வது காலாட் பிரிகேட் சிவில் அலுவல்கள் அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.