29th June 2024 10:50:42 Hours
அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயராம விகாரையில் 2024 ஜூன் 22 அன்று பொசன் போயா தினத்தை முன்னிட்டு மிஹிந்து பெரஹரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.டி.என் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 241 வது காலாட் பிரிகேட் படையினரால் சோறு, பாண், வாழைப்பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அக்கரைப்பற்று வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு.ஏ.அப்துல் சலாம் அவர்கள் இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கினார்.
பின்னர் மாலையில் 241 வது காலாட் பிரிகேட் தலைமையகத்திற்கு முன்னாள் அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த 4,500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் 21 ஜூன் 2024 அன்று குருக்கள்மடம் கலைவாணி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கொண்டைக்கடலை அவியல் தானம் வழங்கினர்.