Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2022 12:41:04 Hours

241 வது காலாட் பிரிகேடினர் உஹன வறிய பொது மக்களுக்கு கால்நடைகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கல்

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் 241 வது பிரிகேடினர், வண. கலிகமுவ ஞானப்பிரதீப தேரர், 'குட்னஸ் அறக்கட்டளை' மூலம் சமூக நலன் சார்ந்த திட்டத்திற்கு தமது அனுசரணையுடன், உஹன பியங்கலவில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு உலர் உணவு, கால்நடைகள் மற்றும் ஊட்டச்சத்துகள் என்பன 22 டிசம்பர் 2022 அன்று பியங்கல ஆரண்ய சேனாசனய மடாலயத்திற்கு பயனாளிகளை வரவழைத்து விநியோகிக்கப்பட்டது.

இதன்படி, குறைந்த வருமானம் பெறும் 50 குடும்பங்களுக்கு 50 உலர் உணவுப் பொதிகளும், 50 கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசிய உபகரணங்களுடன் கூடிய 50 போசாக்குப் பொதிகளும், உஹன, பியங்கல பிரதேசங்களில் வசிக்கும் விவசாய சமூகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு 14 கால்நடைகளும் வழங்கப்பட்டன.

நன்கொடையின் மொத்த மதிப்பு ரூபா. 3 மில்லியனாக இருந்ததுடன், 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி வழங்கிய வழிகாட்டுதல்களின்படி 24 வது காலாட் படைப்பிரிவு படையினரால் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் இந்த மாபெரும் திட்டத்திற்கு வழிகாட்டுதலை வழங்கினார். 24 வது காலாட் படைபிரிவு தளபதி மற்றும் 242 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுருத்த சோலங்கராச்சி இந்த திட்டத்தை உன்னிப்பாக மேற்பார்வையிட்டார். 241 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் தனிக பத்திரத்ன மற்றும் 24 வது காலாட் படைபிரிவின் சிவில் விவகார அதிகாரி மற்றும் 16 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர் உலர் உணவுப் பொதிகள் மற்றும் கால்நடைகள் ஆகிய இரண்டையும் நன்கொடையாக வழங்க ஏற்பாடு செய்தனர்.