Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th June 2024 08:35:25 Hours

24 வது காலாட் படைப்பிரிவு தளபதி காத்தான்குடி பள்ளிவாசல்களுக்கு விஜயம்

24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு 05 ஜூன் 2024 அன்று மரியாதை நிமித்தமான விஜயம் மேற்கொண்டார்.

செயற்குழுவின் செயலாளர் பலாஹி மவுலவி எம்எம்எம் இல்ஹாம் அவர்கள் காலாட் படைப்பிரிவு தளபதியை மரியாதையுடன் வரவேற்றார். பின்னர் செயலாளர் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சமூகத்தின் நலனுக்காக அவர்கள் ஆற்றும் பங்கு மற்றும் பணி பற்றிய சுருக்கமான அறிமுகத்தையும் அமைப்பு பற்றிய அறிமுகத்தையும் வழங்கினார். கலந்துரையாடலின் போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடத்தல் போன்ற முக்கிய பிரச்சனைகளை எடுத்துரைத்தனர்.

அன்றைய நிகழ்வின் நினைவாக காலாட் படைப்பிரிவு தளபதி முஸ்லிம் குழுவினர்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன், அந்த குழுவினரால் நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது. மேலும், முஸ்லிம் அமைப்பின் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் காலாட் படைப்பிரிவு தளபதி பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கூட்டமைப்பின் உயர் உத்தியோகத்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.