26th August 2024 14:05:41 Hours
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 22 ஆகஸ்ட் 2024 அன்று 241 வது காலாட் பிரிகேட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிப்பாய்களுக்கான விடுதியை திறந்து வைத்தார்.
இப் புதிய கட்டிடம் பிரதேசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட வளங்கள் மற்றும் பொறியியல் சேவைகள் பணிப்பகத்தினரால் வழங்கப்பட்ட கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டது. 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 241 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் படையலகுகளினதும் பொறியியல் சேவைகள் படையணியின் படையினரின் மனிதவள உதவியில் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.