Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th August 2023 20:55:30 Hours

24 வது காலாட் படைப்பிரிவினர் பழைய மாணவர்களுடன் இணைந்து அரந்தலாவ மாணவர்களுக்கு உதவி

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைப்பிரிவின் படையினர் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் அம்பாறை அரந்தலாவ நுவரகலதென்ன பாடசாலையின் 161 மாணவர்களுக்கு ஜூலை 31 அன்று பாடசாலை உபகரணங்களை விநியோகித்தனர்.

கொழும்பு ஆனந்த கல்லூரியின் 95 பழைய மாணவ குழு அந்த அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அனுசரணை வழங்கியதுடன், ஒவ்வொரு பரிசுப் பொதியும் சுமார் 15,000/= பெறுமதியானது. ஒவ்வொரு பொதியிலும் பாடசாலை புத்தகங்கள், பைகள், காலணிகள், பென்சில்கள், பேனா போன்றவை அடங்கும். அதே நாளில், அனுசரனையாளர்கள் பாடசாலை நூலகத்திற்கு நூலும், பாடசாலை ஆசிரியர்களுக்கு நன்கொடையாளர்களால் சிறப்பு பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டதுடன், இராணுவத்தின் வேண்டுகோளின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இப் பணியின் நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந் நிகழ்வில் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் நிர்வாகம் மற்றும் வழங்கல் தளபதியான ஒஎன் மானகே ஆர்எஸ்பீ, 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கேஆர்எம் அலவத்த மற்றும் திரு. இஷான் பெரேரா தலைமையிலான பழைய மாணவ 95 குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.