27th February 2024 17:58:34 Hours
24 வது காலாட் படைப்பிரிவு அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் நோக்கில், 2024 பெப்ரவரி 18 ம் திகதி அம்பாறை பிரதேச செயலகத்தில் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை ஒருங்கிணைத்தது. தமன மகா வித்தியாலயம், தீகவாபிய சிங்களப் பாடசாலை, மல்வத்தை புதுநகர் தமிழ் ஆரம்பப் பாடசாலை மற்றும் மஹோயா மகிந்த ராஜபக்ஷ கல்லூரி ஆகியவற்றில் 500 மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மற்றும் புத்தல இராணுவப் போர்க் கல்லூரியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் கேணல் பிடிடீடி ஜயரத்ன அவர்களின் ஒருங்கிணைப்புடன் ஹட்டன் நேஷனல் வங்கியின் முகாமையாள திரு. தமித் பால்லேவத்த மற்றும் அவரது ஊழியர்களும் பாடசாலை உபகரணங்களுக்காக 2 மில்லியனை வழங்கினர்.
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, புத்தள இராணுவ போர் கல்லூரியின் சிரேஷ்ட கட்டளை பாடநெறியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஹட்டன் நஷனல் வங்கியின் பிரதிநிதிகள், குறித்த பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.