30th August 2023 19:56:18 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைப்பிரிவு படையினர், 24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்ஏஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், வியாழன் (24) அம்பாறை செனரத் சோமரத்ன ஆரம்பப் பாடசாலையின் கனிஷ்ட மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
வகுப்பறை பாடத்திட்டத்தில் இருந்து விலகி, 3, 4 மற்றும் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 26 கனிஷ்ட மாணவ தலைவர்களுக்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இச் செயளமர்வில் குழு திட்டங்கள் மூலம் குழுப்பணி, ஒத்துழைப்பு மற்றும் பயனுள்ள தகவல்தொடர்பு ஆகியவற்றை மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.
மாணவர்கள் தங்களைத் தாங்களே தேர்ச்சி செய்து கொள்ளவும், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், விவாதங்களில் பங்கேற்கவும், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் இத்திட்டம் வழிவகுத்ததுடன், நிகழ்ச்சியின் போது, மாணவர்களுக்கு படையினரால் உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.