Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st July 2024 18:13:07 Hours

24 வது காலாட் படைப்பிரிவன் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி திட்டம்

24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்களிடையே எதிர்கால தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 24 வது காலாட் படைப்பிரிவு 2024 ஜூலை 28 அன்று ஹேகொடை ஸ்ரீ இந்திரசர வித்தியாலயத்தைச் சேர்ந்த 54 மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி திட்டத்தை நடாத்தியது.

அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி மாணவர்களின் எதிர்கால கல்வியை திறனாகவும் வெற்றிகரமாகவும் மேம்படுத்துவதாக அமைந்தது. நடைமுறை கல்விக்காக வழங்கப்பட்ட பெறுமதியான செயலமர்விற்கு ஹேகொடை ஸ்ரீ இந்திரசர வித்தியாலய அதிபர் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.