18th April 2024 17:50:18 Hours
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 09 ஆம் திகதி அம்பாறை கோணகல வித்தியாலயம் மற்றும் தீகவாபிய சிங்கள மகா வித்தியாலயத்தில் 24 வது காலாட் படைபிரிவினால் தலைமைத்துவப் பயிற்சித் திட்டம் நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி 24 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ. சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது. விரிவுரைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இளைஞர்களின் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று, தொடர்பாடல் திறன், குழுப்பணி, முடிவெடுத்தல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது போன்ற அத்தியாவசிய திறன்களைக் கற்றுக்கொண்டனர்.
மேலும், நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹெமாஸ் பிரைவேட் லிமிடெட் அனுசரணையுடன் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக 80 பாடசாலை உபகரணப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.