09th April 2023 19:50:49 Hours
24 வது காலாட் படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய 2023 ஆம் ஆண்டிற்கான முதல் விரிவுரை அக்கரைப்பற்றில் உள்ள 241 வது காலாட் பிரிகேட் விரிவுரை மண்டபத்தில் பயிற்சி தினமான சனிக்கிழமை (8) இடம் பெற்றது.
இவ் விரிவுரையில், விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் கட்டளைப் படையலகுகளின் கீழ் கடமையாற்றும் அதிகாரிகள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்தாலோசித்ததுடன் காலத்திற்கேற்ற முக்கியமான முன்னோக்குகளையும் முன்வைத்தனர்.
இம் முன் முயற்சியானது முக்கியமாக பொருளாதார, சமூக, மத மற்றும் ஏனைய தொடர்புடைய பிரச்சினைகளை அடையாளம் காண்பது மற்றும் அந்தந்த பகுதிகளில் கடமையாற்றும் இராணுவத்திற்கு திட்டமிடப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அழுத்தமான பிரச்சினைகளை சமாளிக்க அல்லது குறைக்க சாத்தியமான தீர்வுகள் தொடர்பாகவும் பரிந்துரைக்கப்பட்டது.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றுப் பின்னணியைக் கண்டறியும் பணியை 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணிக்கும், 18 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரிடம் சுற்றுலாத்துறையின் சாத்தியங்கள் மற்றும் சவால்களைத் கண்டறியும் பணியையும், 23வது இலங்கை சிங்க படையணிக்கு அம்பாறை மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கண்டறியும் பணியையும் ஒப்படைக்கப்பட்டது. 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர்கள் படையணியிக்கு இன, மத மற்றும் கலாசார நல்லிணக்கத்திற்கான சவால்களை கண்டறிவதற்கும் மற்றும் 16வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணிக்கு அம்பாறை மாவட்டத்தின் தற்போதைய நீர்ப்பாசன முறைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கதாகும்.
இவ் விரிவுரையில் 24 வது காலாட் படைபிரிவின் தளபதி, 241 வது மற்றும் 242 வது பிரிகேட் தளபதிகள், 24 காலாட் படைபிரிவு மற்றும் பிரிகேடுகளின் பதவி நிலை அதிகாரிகள், படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இப் பயிற்சி தின திட்டத்தில் கலந்து கொண்டனர்.