14th September 2023 20:02:57 Hours
24 வது காலாட் படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன் உணவகத்தை 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 8) திறந்து வைத்தார்.
படைப்பிரிவின் சார்ஜன் மேஜர் மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவின் அனைத்து சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் புதிய கட்டிடத்தின் முன் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியை மரியாதையுடன் வரவேற்றதனை தொடர்ந்து ஆரம்ப நிகழ்வில் பதாதை திரைநீக்கம் செய்து நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. பின்னர், படைப்பிரிவின் தளபதி புதிய பகுதிகளை உன்னிப்பாக ஆய்வு செய்தார்.
முன்னாள் படைப்பிரிவின் தளபதி மற்றும் தற்போதைய படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரின் கூட்டு முயற்சியால் இத் திட்டம் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதிப் பகுதியாக,புதிய கட்டிடத்தின் முன்புறத்தில் ஒரு மரக்கன்று நட்டுவைக்கப்பட்டதுடன், புகைப்படம் மற்றும் தேநீர் விருந்தும் இடம் பெற்றது.
புதிய அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன் உணவகம் நவீன வசதிகளை கொண்டுள்ளதுடன், இது எங்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஆண் மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. இவ் உணவகத்தில் ஒரு விசாலமான உணவு மேசை உள்ளது, இதில் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்கள் இருந்து உணவு மற்றும் சிற்றுண்டிகளை உண்ண முடியும்.