12th June 2024 22:06:54 Hours
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 2024 ஜூன் 05 ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரை சந்தித்தார். இந்த சந்திப்பில் சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம், சமூக நடவடிக்கைகள் மற்றும் சிவில்-இராணுவ உறவுகள் உட்பட பலதரப்பட்ட தலைப்புகளை உள்ளடக்கி கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
விஜயத்தின் போது, படைப்பிரிவின் தளபதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரான திருமதி ஜேஜே முரளிதரன் உடனான உரையாடலில் சமூக உறவுகளில் குறிப்பிட்ட கவனம் செலுத்தல் பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்து ஒத்துழைப்பதற்கான வழிகளை வழங்குதல் தொடர்பாக படைப்பிரிவின் தளபதி மற்றும் அரசாங்க அதிபர் இருவரும் உறவுகளை வலுப்படுத்துவதற்கும் மட்டக்களப்பு சமூகத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தின.
இந்த கலந்துரையாடலில் இராணுவத்திற்கும் உள்ளூர் சமூகத்திற்கும் இடையிலான ஈடுபாடு மற்றும் தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளும் இந்த சந்திப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளில் கலாச்சார பரிமாற்றங்கள், சிவில்-இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் நட்புறவு மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கும்.
இந்நிகழ்வில் 24 ஆவது காலாட் படைபிரிவின் கேணல் பொதுப்பணி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.