Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th September 2023 19:51:29 Hours

24 காலாட் படைப்பிரிவின் இசை நிகழ்ச்சி

24 வது காலாட் படைப்பிரிவு தலைமையக படையினர்களுக்கு மன உறுதி, மன மகிழ்ச்சி மற்றும் மிகவும் தேவையான ஓய்வு வழங்கும் முயற்சியாக, இலங்கை இராணுவ இசைக்குழு மற்றும் 18 வது விஜயபாகு காலாட் படையணி ஆகியவற்றால் சிறப்பு 'ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு' நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. 241, 242, 243 காலாட் பிரிகேட்களின் கீழ் மற்றும் அக்கரைப்பற்று, அருகம்பே, மட்டக்களப்பு மற்றும் மல்வத்தை (அம்பாறை) ஆகிய இடங்களில் 24 வது காலாட் படைப்பிரிவில் சேவையாற்றும் படையினர்களின் சாத்தியமான இசைத் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் ஆலோசனையின் பேரில் செப்டெம்பர் 4 முதல் 6 வரை குறிப்பிட்ட இடங்களில் இந்த ஏற்பாடுகள் 24 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டது.

அந்தந்த முகாம்களில் 1000 க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த ஏற்பாட்டில் இணைந்து கொண்டனர். இராணுவ இசைக்குழு மற்றும் 18 வது விஜயபாகு காலாட் படையணியின் இசைக்குழுவில் உள்ள இசைக்கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதில் தீவிரமாக பங்களித்தனர். மேலும், அந்த பகுதிகளில் உள்ள இராணுவக் குடும்பங்களின் மனைவிமார் மற்றும் உறுப்பினர்களும் அந்தந்த இடங்களில் தங்கள் இராணுவ உறுப்பினர்களுடன் சேர்ந்து மகிழ்ந்தனர்.