13th August 2020 12:18:33 Hours
அம்பறையில் உள்ள 24 ஆவது காலாட் படைப் பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட படைத் தளபதி மேஜர் ஜெனரல் திலக் வீரகோன் அவர்கள் அவரது நிருவாகத்திற்கு கீழ் இயங்கும் 241 மற்றும் 242 ஆவது காலாட் படைத் தலைமையங்களுக்கும், 23 ஆவது இலங்கை சிங்க படையணி, 3 ஆவது விஜயபாகு காலாட் படையணி, 8 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி, 11 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி, 16 இலங்கை தேசிய பாதுகாப்பு படையணிகளுக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை ஓகஸ்ட் 8 -12 ஆம் திகதிகளில் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது 241 மற்றும் 242 ஆவது காலாட் படையணி தலைமையகங்கள் மற்றும் ஏனைய படையணிகளுக்கு வருகை தந்த படைத் தளபதிக்கு 241 காலாட் படை படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜனக விமலரத்ன மற்றும் 242 காலாட் படை படையணியின் கட்டளைத் தளபதி கேணல் சந்திக பீரிஸ் மற்றும் ஏனைய கட்டளை அதிகாரிகளால் நுழைவாயிலில் வைத்து வரவேற்கப்பட்டார்.
பின்னர் படைத் தளபதி அவர்களின் தலைமையில் அவரது தலைமையின் கீழுள்ள படைத் தலைமையகங்கள், படையணிகளின் நிருவாகம் மற்றும் தளவாட அமசங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றன.
அத்துடன் 24 ஆவது படைப் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களான நொரச்சோலை அம்பாறை இராணுவ பயிற்சி மையங்களுக்கும் விஜயத்தை மேற்கொண்டார்.
மேலும் பொத்துவிலில் அமைந்துள்ள முகுது மஹா விகாரைக்கு விஜயத்தை மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டு அந்த விகாரையின் விகாராதிபதி மதிப்புக்குரிய வரகாபொல இந்திரசிறி தேரர் அவர்களை சந்தித்து அவரிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Nike Sneakers | Nike Air Max 270