Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2023 21:09:20 Hours

233 வது காலாட் பிரிகேட் படையினரால் கதிரவெளி 'சரஸ்வதி' பாலர் பாடசாலை புனரமைப்பு

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 233 வது காலாட் பிரிகேட் படையினரால் மற்றுமொரு நலத் திட்டத்தின் கீழ், 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் 233 காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏகேசிஎஸ் டி சில்வா ஆர்எஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ். கதிரவெளி, புதூர் 'சரஸ்வதி' பாலர் பாடசாலை கட்டிடத்தைப் புனரமைத்து ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ட் 13) நடைபெற்ற விழாவில் அதிகாரபூர்வமாக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

புதூர் கிராமத்தில் உள்ள 'சரஸ்வதி' பாலர் பாடசாலை 41 பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதுடன், மாகாண சபையால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பாலர் பாடசாலையானது அத்தியாவசிய வளங்களான மேசைகள், நாற்காலிகள் மற்றும் நீர் வசதிகள், முறையான சுகாதார வசதிகள், கட்டிடப் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு சமையலறை போன்றவற்றைப் பெறுவதில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளது.

இத் தேவைகள் 233 வது காலாட் பிரிகேட் படையணியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, படையினரால் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சிப்பாய்கள் வகுப்பறைகள் மற்றும் அனைத்து தளபாடங்கள் உட்பட அதன் பாகங்கள் மற்றும் உபகரணங்களை புதுப்பித்தனர். நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் குழு வழங்கிய நிதியுதவியுடன் புனரமைப்புத் திட்டத்தைப் பொறுப்பேற்ற 3 வது இராணுவ பொறியியல் சேவைகள் படையினரால் நிர்மாணிக்க புதிய சமையலறை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 233 வது காலாட் பிரிகேட் தளபதியுடன் இணைந்து சம்பிரதாய கையளிப்பு நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வின் போது சிறுவர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அலுவலர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் கலந்து கொண்டனர்.