Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2024 19:11:21 Hours

233 வது காலாட் பிரிகேடினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

2024 நவம்பர் 27 அன்று வெலிகந்த பிரிதேசத்தில் வெள்ளத்தில் சிக்கித் தனிமைபட்டிருந்த மூன்று விவசாயிகளை வெலிகந்த பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் ஆதரவுடன் 9 வது இலங்கை பீரங்கிப் படையணி படையினர் வெற்றிகரமாக மீட்டனர்.

இதேவேளை, 233 வது காலாட் பிரிகேட் படையினர், வாகரை பிரதேச செயலக ஊழியர்களுடன் இணைந்து வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கினர். மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து கர்ப்பிணிப் பெண் ஒருவரை மீட்டு வாகரை பிரதேச வைத்தியசாலையில் பாதுகாப்பாக அனுமதித்துள்ளனர்.