Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th August 2021 13:40:47 Hours

233 வது பிரிகேட் படையினர் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் வாகறையில் ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு கட்டும் பணியில்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் 233 வது பிரிகேட் படையினர் வெள்ளிக்கிழமை (13) இராணுவ தலைமையகத்தின் வழிகாட்டுதலின்படி செவனப்பிட்டிய ஏழை குடிமகனான திரு.ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக புதிய வீட்டு நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டினர்.

233 வது பிரிகேட்டின் தளபதியின் வேண்டுகோளின் பேரில், கம்பஹாவைச் சேர்ந்த திரு பிரசாத் லொகுபாலசூரிய கட்டுமானத்திற்குத் தேவையான மூலப்பொருட்களுக்கான நிதியினை செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். அதே வேளை இலங்கை பீரங்கி (எஸ்எல்ஏ) படையினர் தங்கள் மனிதவளம், தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவத்தை வழங்க முன்வந்துள்ளனர் 233 வது பிரிகேட் தளபதி மற்றும் சிவில் விவகார அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, மற்றும் 23 ஆவது படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த, ஆகியேயார் இந்த திட்டத்திற்கான முழு ஆசிகளையும் வழங்கியுள்ளனர்.

223 வது பிரிகேட் தளபதி யேணல் வசந்த ஹேவகே மேலும் சில அதிகாரிகளுடன் இணைந்து ஏழை குடும்பத்திற்கு புதிய வீடு கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். 233 வது பிரிகேட் தளபதி, நன்கொடையாளர் திரு பிரசாத் லொகுபாலசூரிய 9 வது இலங்கை பீரங்கி படையின் கட்டளை அதிகாரி, சிவில் விவகார அதிகாரி மற்றும் கட்டுமானத்துடன் தொடர்புடைய படையினர் கொவிட் 19 தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை கடைபிடித்து நிகழ்வில் பங்கேற்றனர்.