Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd March 2025 14:09:48 Hours

233 வது காலாட் பிரிகேடினரால் சரஸ்வதி பாலர் பாடசாலைக்கு புதிய சமையலறை நிர்மாணிப்பு

புத்தூர் கதிரவெளி சரஸ்வதி பாலர் பாடசாலை, புதூர் கிராமத்தைச் சேர்ந்த 41 மாணவர்களுக்கு ஆரம்பகால கல்வியை வழங்குகிறது. மாகாண சபையின் கீழ் இயங்கினாலும், மேசை கதிரைகள் மற்றும் நீர் அமைப்புகளுடன் கூடிய சரியான சுகாதார வசதிகள், கட்டிட பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு சமையலறை போன்ற அத்தியாவசிய வளங்களைப் பெறுவதில் பாலர் பாடசாலை குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளது. 16 ஆண்டுகாலப் பணி அனுபவம் கொண்ட ஒரு பெண் ஆசிரியர் உட்பட மூன்று அர்ப்பணிப்புள்ள கற்பித்தல் ஆசிரியர்கள், பல மாணவர்களை உயர்கல்விக்கு வளர்ப்பதிலும் தயார்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

ஒரு முன்னோடி பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சியாக, புனானியில் உள்ள 23 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதலுடன், வாகரையில் உள்ள 233 வது காலாட் பிரிகேட் படையினரும், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகமும் பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தத் திட்டத்தை மேற்கொண்டனர். அதன்படி, நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு சமையலறை நிர்மாணிக்கப்ட்டுள்ளது.

233 வது காலாட் பிரிகேட் மற்றும் 7 வது கெமுனு ஹேவா படையணி படையினர் இந்த முயற்சியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளதுடன், மேலும் இத் திட்டத்திற்கு மேஜர் ஜெனரல் பீ.ஆர். வணிகசூரிய (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ யூஎஸ்ஏசீஜீஎஸ்சீ அவர்கள் நிதி உதவியினையும் அளித்துள்ளார்.