Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th November 2021 09:57:06 Hours

233 பிரிகேடிட் படையினர் மத விழாவிற்கு ஒத்துழைப்பு

வாழைச்சேனை மகிந்தராம விகாரை தலைமை தேரரின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப் பிரிவின் 233 வது பிரிகேடின் 6 வது கஜபா படைப்பிரிவின் படையினர் நவம்பர் மாதம் 13-14 ஆம் திகதிகளில் வாழைச்சேனை மகிந்தராம விகாரையில் வருடாந்த 'கட்டின சீவர' பூஜை விழாவை நடாத்துவதற்கு உதவினர்.

இந்த விழாவில் புதிய துறவிகள் ‘கட்டின பிங்கம’ பூஜையின் போது அர்ச்சனை செய்யப்பட்டதுடன். படையினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இந்நிகழ்வை நடத்துவதற்கான அனைத்து பொருள் உதவிகளையும் வழங்கினர். அனைத்து ஏற்பாடுகளையும் 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே மேற்பார்வையிட்டார். அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இத்திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு ஒத்துழைப்பினை வழங்கினர்.