14th October 2023 17:19:30 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட்படைப் பிரிவின் கீழ் உள்ள 232 வது காலாட் பிரிகேடின் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். 23 வது காலாட்படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2023 ஒக்டோபர் 07 - 08 திகதிகளில் திஹிலிவெட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் கல்குடாவில் உள்ள இரளக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது.
கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த திருமதி ஏ.கனகரத்தினம் மற்றும் திருமதி எம் அருளேந்திரம் ஆகியோர் அமர்வுகளை நடாத்தினர். கல்குடா பிரதேசத்திலுள்ள 18 பாடசாலைகளில் கல்வி கற்கும் 119 மாணவர்கள் அந்த அமர்வுகளில் கலந்துகொண்டனர். 232 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மற்றும் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி நிகழ்ச்சியை நெருக்கமாக மேற்பார்வையிட்டனர்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் இந் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.