15th July 2024 11:50:14 Hours
இராணுவம் மற்றும் பொதுமக்களை விசர்நாய்கடி நோயின் தாக்கத்திலிருந்து தடுக்கும் பொருட்டு 232 வது காலாட் பிரிகேட் தலைமையகம் மற்றும் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் முகாம் வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் பூனைகளை இலக்கு வைத்து தடுப்பூசி வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
232 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்பீஎஸ் பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதுடன், புலிபாஞ்சக்கல், இரால்குளம் மற்றும் தொப்பிகல் போன்ற பிரதேசங்களில் உள்ள 112 நாய்கள் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டன.
இந்த திட்டத்திற்கு பொது சுகாதார அலுவலகதின் மூன்று அதிகாரிகள் பங்களிப்பு வழங்கினர்.