08th May 2024 17:32:12 Hours
232 வது காலாட் பிரிகேட் ரொஷான் மஹாநாம அறக் கட்டளையுடன் இணைந்து புன்னைக்குடா கிழக்கு பாலர் பாடசாலை சிறுவர்களுக்கான மலசலகூடம் நிர்மாணித்து 2024 மே 04 ம் திகதி கையளித்தது.
மேஜர் ஜெனரல் எம்.கே.டி பெரேரா (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் ஒருங்கிணைப்பில் ரொஷான் மஹாநாம அறக் கட்டளை ரூ. 275,000.00 நிதியுதவியை கட்டுமானத்திற்காக வழங்கியது. 4 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் நிர்மாணத் திட்டத்திற்கு தேவையான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கப்பட்டன. இதே நிகழ்வின் போது மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
அதே வேளை கல்குடா ஸ்ரீ சீலாலங்கார சிங்கள வித்தியாலய மாணவர்களுக்கு ரூபா 800,000.00 மதிப்புள்ள தளபாடங்கள் வழங்கப்பட்டது. கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையகத் தளபதி மற்றும் 23 காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோர் திட்டத்திற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.
மேஜர் ஜெனரல் எம்.கே.டி பெரேரா (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ 232 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், முன்னாள் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களான, திரு. ரொஷான் மஹாநாம, திரு.சமிந்த வாஸ் மற்றும் திரு. கலுவித்தாரான ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.