29th May 2024 13:18:35 Hours
திருமதி உத்யானி முனசிங்க மற்றும் அவரது குடும்பத்தினரின் அனுசரணையில், 231 காலாட் பிரிகேட் படையினர் 50 கர்ப்பிணிப் பெண்களுக்கும், 02 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும், 05 குடும்பநல உத்தியோகத்தர்களுக்கும் மகப்பேறு உதவி பொருட்களை விநியோகித்தனர். இந்த நிகழ்வு 19 மே 2024 அன்று ஹிகுராக்கொட ‘புலதிசி தாருக மண்டபய’ அரங்கில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் கலந்து கொண்டார். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சமூகத் திட்டத்தில் சிறப்பு மதிய உணவும் வழங்கப்பட்டது.
231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏஏடிபீ குலதிலக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த நன்கொடை நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.