10th July 2023 23:36:23 Hours
23 வது காலாட் படைப்பிரிவின் 231 வது பிரிகேடின் 7 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணியின் 3 அதிகாரிகள் மற்றும் 53 சிப்பாய்களின் ஒருங்கிணைந்த முயற்சியில் சனிக்கிழமை ( ஜூலை 8). ஹபரணை, கலோயாவில் வேகமாக பரவிய காட்டுத்தீ கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
காட்டுத் தீ பரவியதும், ஹபரணை எல்லை வன அலுவலக அதிகாரிகள் 231 வது காலாட் பிரிகேட் படையினர் மற்றும் பிற நிறுவனங்களிடம் உதவி கோரிக்கை விடுத்தனர்.
எனினும் அப்பகுதியிலுள்ள இராணுவப் படையினர், வன அதிகாரிகள், கிராம மக்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவினால் சில மணித்தியாலங்களில் தீயினை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.எம்.சி.எஸ்.குமாரசிங்க அவர்கள் இந்நிகழ்வினை மேற்பார்வையிட்டார்.