22nd May 2023 16:50:57 Hours
புனானி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படையணியின் 231 வது காலாட் பிரிகேட் படையினரால் அரசாங்க டெங்கு தடுப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, செவ்வாய்க்கிழமை (மே 16) மட்டக்களப்பு மற்றும் மண்முனை நகரங்களைத் தூய்மைப்படுத்தும் செயற்திட்டத்தை முன்னெடுத்தனர்.
4 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 11 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன், மட்டக்களப்பு மற்றும் மண்முனை நகரங்களில், அந்தந்த கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி பணியை மேற்கொண்டனர்.
அதேபோன்று, மட்டக்களப்பு மற்றும் மண்முனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மட்டக்களப்பு மற்றும் மண்முனை பொலிஸ் நிலையங்களின் 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 55 தொண்டர்கள் இணைந்து இந் திட்டம் வெற்றியடைய உதவினர்.
இத்திட்டமானது செயல்பாட்டு பணிப்பகத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்கே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இப் பணியில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை ஆய்வு செய்ததுடன் அதே நேரத்தில் மக்கள் தங்கள் இடங்களை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டனர். நிகழ்ச்சியின் போது பொது சுகாதார பரிசோதகர்களால் 10 வீடுகளுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டது.