Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd October 2021 09:00:29 Hours

231 வது பிரிகேட் படையினரால் ஏழை குடும்பங்களுக்கு மஞ்சள் செடிகள் விநியோகம்

241 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபல்யு.எம்.என்.டி பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 4 வது கெமுனு ஹேவா படையினர் செவ்வாய்க்கிழமை (19) மட்டக்களப்பு மாவட்ட திரயமடு பகுதியின் 30 ஏழை குடும்பங்களுக்கு 600 மஞ்சள் செடிகளை விநியோகித்தனர்.

திரயமடு கிராமத்தில் தங்கள் சொந்த தோட்டங்களில் விலையுயர்ந்த மஞ்சள் செடிகளை வளர்ப்பதன் மூலம் பொதுமக்களின் வருமானத்தின் தரத்தை உயர்த்த உதவுவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

231 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 4 வது கெமுனு ஹேவா ‘ஏ’ குழு பொறுப்பதிகாரி மற்றும் 4 வது கெமுனு ஹேவா படையினர் இத்திட்டத்தில் இணைந்துக் கொண்டனர்.