Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th July 2023 18:33:54 Hours

23 வது கெமுனு ஹேவா படையினரால் பளை பிரதேச வைத்தியசாலை சுத்தம்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது காலாட்படைப் பிரிவின் 23 வது கெமுனு ஹேவா படையணி படையினர் தமது சுய முயற்சியால் வைத்தியசாலையின் சுகாதாரத் தரத்தை உயர்த்தும் நோக்கில் புதன்கிழமை (26) பளை பிரதேச வைத்தியசாலை வளாகத்தை சுத்தம் செய்தனர்.

அதற்கமைய இத்திட்டத்தில் 15 சிப்பாய்களும் வைத்தியசாலை ஊழியர்களும் பங்கேற்றனர்.

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாம்பத் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி மற்றும் 522 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்கேடி பெர்னான்டோ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆகியோர் வழங்கிய வழிகாட்டலின் கீழ் 23 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஆர்எம்எம்பி சம்பத் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்கள் இத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.