18th July 2024 18:47:21 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தற்போதைய வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2024 ஜூலை 16 அன்று முகமாலையில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை கையளித்தார். இந்த திட்டத்திற்கு அனுசரனையாளர்களால் ஆதரவு வழங்கப்பட்டது.
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்எம்ஆர்பி ரத்நாயக்க ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் 23 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், உள்ளுர் சமூக தலைவர்கள், சிப்பாய்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.