Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st October 2023 19:16:56 Hours

23 வது கெமுன ஹேவா படையணியினால் முகமாலை பாலர் பாடசாலை பிள்ளைகளுக்கு உணவு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது கெமுனு ஹேவா படையினர், முகமாலை இளநாத்திரந்தலை பாலர் பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த 14 பிள்ளைகளுக்கு புதன்கிழமை (செப். 27) அவர்களின் உடல்நலம் மற்றும் போஷாக்கு காரணிகளைக் கருத்தில் கொண்டுஇலவச உணவை வழங்கினர்.

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 522 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 23 வது கெமுன ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் கட்டளையின் கீழ் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.