19th July 2023 19:15:02 Hours
வெலிகந்த மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் வறிய மக்களின் பார்வைக் குறைபாடுகள் மற்றும் நோய்களைக் கருத்தில் கொண்டு கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 233 வது காலாட் பிரிகேடின் 9 வது இலங்கை பீரங்கி படையினர் செவ்வாய்க்கிழமை (18) வெலிகந்த கலாசார நிலையத்தில் நடமாடும் கண் பரிசோதனை நிலையத்தினை ஏற்பாடு செய்ததுடன், மூக்குகண்ணாடிகளை வழங்கினர்.
23 வது காலாட் படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 'ஹெல்ப் ஏஜ் ஸ்ரீலங்கா' அமைப்பின் நடமாடும் மருத்துவ மற்றும் கண் பராமரிப்புப் பிரிவு ஜூலை 10 மிகவும் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடமாடும் கண் சிகிச்சை முகாமை நடாத்திய பின்னர், பரிசோதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு 118 மூக்குகண்ணாடிகளை இலவசமாக வழங்க முன்வந்தனர்.
இத்திட்டம் 9 வது இலங்கை பீரங்கி படையணியின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், 9 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்ஐஎஸ் சந்திரகுமார யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இத்திட்டத்தை ஒருங்கிணைப்பு செய்ததுடன், கிராம சேவை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து கண்ணாடிகள் வழங்குவதற்கு முன்னர் தகுதியானவர்களை அடையாளம் கண்டு வழங்கல் திட்டத்தை முன்னெடுத்தனர்.
23 வது காலாட் படைப்பிரிவின் பிரிகேடியர் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, 'ஹெல்ப் ஏஜ் ஸ்ரீலங்கா' மற்றும் சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.