29th July 2023 18:11:47 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவு அதன் 26 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமூக நல செயற்த்திட்டமாக வியாழன் அன்று (ஜூலை 20) கீரிமிச்சோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 30 மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவு உபசரிப்புடன் இலவசப் பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வைத்தது.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கே.வி.பீ.என் பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு நன்கொடையாளர் இத் திட்டத்திற்கு ரூ 150,000/= உதவி தொகையினை வழங்கினார். ஒவ்வொரு பொதியிலும் அவர்களின் கல்வி தேவைகளுக்கு தேவையான பாடசாலைப் புத்தகங்கள், உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், பேனாக்கள் மற்றும் பென்சில்கள் போன்றவை இருந்தன. அந்த பரிசுப் பொதிகள் வழங்கப்பட்ட பின்னர், அந்த பிள்ளைகள் அனைவருக்கும் நல்லெண்ணம் மற்றும் புரிதலின் அடையாளமாக மதிய உணவும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கே.வி.பீ.என் பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, 233 வது காலாட் பிரிகேட் தளபதி, 23 வது படைப்பிரிவு மற்றும் 233 வது பிரிகேடின் பணிநிலை அதிகாரிகள், 6 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி மற்றும் சிப்பாய்கள் உட்பட பல அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.