25th July 2023 21:20:12 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவு மட்டக்களப்பை தளமாகக் கொண்ட மாகாண இலங்கை ஊடக மன்றத்தின் அனுசரணையின் ஊடாக அதன் தலைவரும் பிரபல நன்கொடையாளருமான திரு.வாமதேவ தியாகேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு 100 புலமைப்பரிசில்கள் மற்றும் அண்மையில் மனம்பிட்டிய கொட்டலீய பால பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபா.100,000/= நன்கொடை உதவியும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு புதன்கிழமை (ஜூலை 19) ஓட்டமாவடி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ கலந்து கொண்டார்.
மட்டக்களப்பில் உள்ள 100 ஏழை மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000/= பண உதவி அவர்கள் உயர்கல்வியினை முடிக்கும் வரை தொடர்ச்சியாக வழங்கப்படும். 232 வது காலாட் பிரிகேட் தளபதியின் பணிப்புரையின் பேரில் 4 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 6 வது கஜபா படையணி படையினர் இணைந்து வழங்கல் விழாவினைைஏற்பாடு செய்திருந்தனர். அதே நன்கொடையாளர் இந் நிகழ்வின் போது மனம்பிட்டிய கொட்டலீய பால பஸ் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூபா.100,000/= நன்கொடையாக வழங்கினார்.
மட்டக்களப்பு இலங்கை ஊடகவியலாளர் மன்றத்தின் செயலாளரும், பிரதேச செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 232 மற்றும் 233 வது காலாட் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், 4 வது கெமுணு ஹேவா படையணி மற்றும் 6 வது கஜபா படையணி கட்டளை அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.