19th February 2023 20:20:57 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவின் 122 வது காலாட் பிரிகேடின் 23 வது கஜபா படையணியின் படையினரால் சில நன்கொடையாளர்களின் ஆதரவுடன் யோதகண்டிய ஸ்ரீ தேவானந்தா கல்லூரி மற்றும் கிரிந்த ஆரம்பக் பாடசாலையில் 30 வறிய மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான கல்வி உபகரண பொதிகளை சனிக்கிழமை (பெப்ரவரி 18) ஸ்ரீ தேவானந்த கல்லூரி கேட்போர் கூடத்தில் வழங்கியது.
இத் திட்டத்தின் கீழ் யோதகண்டிய ஸ்ரீ தேவானந்த கல்லூரியின் 10 மாணவர்களுக்கும் கிரிந்த ஆரம்பக் பாடசாலை 20 மாணவர்களுக்கும் தலா ரூ. 3000.00 பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டது. இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் உள்ள பல நன்கொடையாளர்கள் அந்த பொருட்களின் விலையை பகிர்ந்து கொண்டனர். இத் திட்டம் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க, 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மிஹிந்து பெரேரா மற்றும் 122 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நதீக குலசேகர ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 23 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கே.ஏ.எஸ் குணவர்தனவினால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் 12 வது காலாட் படைப்பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு கேணல் இந்திக குணவர்தன, 122 வது காலாட் பிரிகேடின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி லெப்டினன் கேணல் டி.எச்.டி.சி ஜயவீவா, 23 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி, அதிகாரிகள்,சிப்பாய்கள் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.