13th July 2021 18:22:34 Hours
23 வது விஜயபாகு காலாட்படையணியில் புதிதாக நிறுவப்பட்ட அதிகாரிகளுக்கான உணவகம் 23 வது விஜயபாகு காலாட்படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏ.பி.எஸ் அத்துகோரல அவர்களின் அழைப்பின் பேரில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியும் விஜயபாகு காலாட்படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களினால் வெள்ளிக்கழை (9) திறந்து வைக்கப்பட்டது.
23 வது விஜயபாகு காலாட்படையின் அதிகாரிகளுக்கான புதிய உணவக கட்டிடத் தொகுதியின் பெயர் பலகையை திறந்து வைத்த அவர் படையினர் மத்தியிலும் உரையொன்றினை நிகழ்த்தினார். 53 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே , 64 வது படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் உபுல் வீரகோன், 541 மற்றும் 642 வது பிரிகேட் தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.